Wednesday, 28 October 2020

நில அளவீடுகள்

 நில அளவீடுகள்

*****************

1 சென்ட் – 40.47 சதுர மீட்ட‍ர்

1 ஏக்க‍ர் – 43,560 சதுர அடி

1 ஏக்க‍ர் – 40.47 ஏர்ஸ்

1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்

1 சென்ட் – 435.6 சதுர அடி

1 ஏர்ஸ் – 100 சதுர மீட்ட‍ர்

1 குழி – 144 சதுர அடி

1 சென்ட் – 3 குழி

3 மா – 1 ஏக்க‍ர்

3 குழி – 435.6 சதுர அடி

1 மா – 100 குழி

1 ஏக்க‍ர் – 18 கிரவுண்டு

1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்


ஏக்கர்


1 ஏக்கர் – 100 சென்ட்

1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்

1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்

1 ஏக்கர் – 43560 ச.அடி

1 ஏக்கர் – 4046 ச மீ


செண்ட்


1 செண்ட் – 001 ஏக்கர்

1 செண்ட் – 0040 ஹெக்டேர்

1 செண்ட் – 0.405 ஏர்ஸ்

1 செண்ட் – 435.54 ச.அடி

1 செண்ட் – 40.46 ச மீ


ஹெக்டேர்


1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்

1 ஹெக்டேர் – 247 செண்ட்

1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்

1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி

1 ஹெக்டேர் – 10,000 ச மீ


ஏர்ஸ்


1 ஏர் – 2.47 செண்ட்

1 ஏர் – 100 ச.மீ

1 ஏர் – 1076 ச.அடி


100 குழி = ஒரு மா

20 மா = ஒரு வேலி

3.5 மா = ஒரு ஏக்கர்

6.17 ஏக்கர் = ஒரு வேலி


1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்

1 ஏக்கரின் அகலம் = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்

நீட்டலளவை


• 10 கோண் = 1 நுண்ணணு


• 10 நுண்ணணு = 1 அணு


• 8 அணு = 1 கதிர்த்துகள்


• 8 கதிர்த்துகள் = 1 துசும்பு


• 8 துசும்பு = 1 மயிர்நுனி


• 8 மயிர்நுனி = 1 நுண்மணல்


• 8 நுண்மணல் = 1 சிறு கடுகு


• 8 சிறு கடுகு = 1 எள்


• 8 எள் = 1 நெல்


• 8 நெல் = 1 விரல்


• 12 விரல் = 1 சாண்


• 2 சாண் = 1 முழம்


• 4 முழம் = 1 பாகம்


• 6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)


• 4 காதம் = 1 யோசனை


• வழியளவை


• 8 தோரை(நெல்) = 1 விரல்


• 12 விரல் = 1 சாண்


• 2 சாண் = 1 முழம்


• 4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்


• 2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்


• 4 குரோசம் = 1 யோசனை


• 71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)


நிலவளவை குழிக்கணக்கு வருமாறு


16 சாண் = 1 கோல்


18 கோல் = 1 குழி


100 குழி = 1 மா


240 குழி = 1 பாடகம்


கன்வெர்ஷன்


1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்


1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்


1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்


1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்


பிற அலகுகள்1


ஏர் = 100 சதுர மீட்டர்

1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்

தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.

நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.

1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்


1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்


நில அளவை 


100 ச.மீ - 1 ஏர்ஸ்


100 ஏர்ஸ் - 1 ஹெக்டேர் 


1 ச.மீ - 10 .764 ச அடி


2400 ச.அடி - 1 மனை 


24 மனை - 1 காணி


1 காணி - 1 .32 ஏக்கர் 


144 ச.அங்குலம் - 1 சதுர அடி 


435 . 6 சதுர அடி - 1 சென்ட் 


1000 ச லிங்க்ஸ் - 1 சென்ட் 


100 சென்ட் - 1 ஏக்கர் 


1லட்சம்ச.லிங்க்ஸ் - 1 ஏக்கர் 


2 .47 ஏக்கர் - 1 ஹெக்டேர்


1 ஹெக்டேர் = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )


1 ஏக்கர் = 4840 குழி (Square Yard)


100 சென்ட் = 4840 சதுர குழிகள் 


1 சென்ட் = 48.4 சதுர குழிகள்


1 ஏக்கர் = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )


1 ஏக்கர் = 43560 சதுர அடி

Thursday, 2 April 2020

கண்டுபிடி


வார்த்தைகளை கண்டுபிடிங்க:



1) ப வ க க க் ழ க் ம் ழ
2) ம் அ சி த் வ தி யா ய
3) த் ம் து க த நா
4) று பி ல் த த் னு ன்
5) க் போ கு ரு கு ட் ம் டா
6) ம் க க் னி தா ள ய ஞ் ய சி
7) ர் ந் த நி ம் ப் ப
8) த் ல் த ய க டு து ப மை
9) வு ஆ ம் ய் ட கூ
10) ர் த த் ல் டு தொ போ
11) க ப வெ து ப ம்
12) த் த து டு ப து ரி
13) ய கா ரி சி ரி த
14) ட் டை ச அ ச் ரை
15) கு ட ய் ப ம பா ர
16) கு றை ப றா ற் க்
17) வா ம் சி தே ய த
18) ய ம் கி க் வ மு து
19) க ள் து கு ணு க்
20) லை வோ ட கு
👇

விடைகள் கீழே 

















விடைகள்:
1) பழக்கவழக்கம்.
2) அத்தியாவசியம்.
3) துத்தநாகம்
4) பின்னுறுத்தல்
5) குருட்டாம்போக்கு
6) தானியக்களஞ்சியம்.
7) நிர்ப்பந்தம்.
9) ஆய்வுகூடம்.
10) போர்தொடுத்தல்
11) வெதுப்பகம்
12) துரிதபடுத்து
13) காரியதரிசி.
14) அரைச்சட்டை.
15) பாய்மரபடகு
16) பற்றாக்குறை.
17) தேசியவாதம்
18) முக்கியத்துவம்
19) துணுக்குகள்.
20) குடவோலை.

Wednesday, 18 March 2020

இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர் என்று சொல்லியிருக்கிறார்கள்.


1 இராஜாக்கள் 8:37-40:
"37 தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளைநோய் உண்டாகிறபோதும், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும், அவர்கள் சத்துருக்கள் தேசத்திலுள்ள பட்டணங்களை முற்றிக்கை போடுகிறபோதும், யாதொரு வாதையாகிலும் யாதொரு வியாதியாகிலும் வருகிறபோதும்,
38 உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் அனைவரிலும் எந்த மனுஷனானாலும் தன் இருதயத்தின் வாதையை உணர்ந்து, இந்த ஆலயத்துக்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும்,
39 உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து,
40 தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்படும்படிக்கு தேவரீர் ஒருவரே எல்லா மனுப்புத்திரரின் இருதயத்தையும் அறிந்தவராதலால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய வழிகளுக்குத்தக்கதாகச் செய்து, அவனவனுக்குப் பலன் அளிப்பீராக."

Monday, 16 March 2020

கர்த்தர் கொடுத்த பெற்றோர்

கர்த்தர் கொடுத்த பெற்றோர்

உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே. - (நீதிமொழிகள் 23:22).

ஒரு வேடிக்கையான கதை உண்டு. ஒரு தாயின் மூன்று குமாரர்கள் நன்கு படித்து, வீட்டை விட்டு வெளியே சென்று நன்கு சம்பாதித்து, நல்ல நிலைமையில் இருந்தார்கள். ஒரு நாள் அவர்கள் மூவரும் கூடி தங்கள் தாயாருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒருவரோடொருவர் சொல்லி கொண்டார்கள். அதன்படி மூத்தவன் 'நான் அம்மாவுக்கென்று ஒரு பெரிய வீட்டை கட்டியிருக்கிறேன். ஏசியெல்லாம் போட்டு, சூப்பரா கலக்கியிருக்கிறேன்' என்று கூறினான். அடுத்தவன், 'நான் அம்மாவுக்கென்று ஒரு மெர்சிடஸ் காரும், அவர்கள் ஹாயா உட்கார்ந்து போகத்தக்கதாக ஒரு டிரைவரையும் ஏற்பாடு பண்ணியிருக்கிறேன்' என்று கூறினான். கடைசி மகன், 'உங்களுக்கெல்லாம் தெரியும், அம்மா பைபிளை அதிகமாக வாசிக்க பிரியப்படுவார்கள் என்று. ஆனால் அவர்களுடைய கண் சரியாக தெரியாததால் அவர்களால் சரியாக வாசிக்க முடிவதில்லை. ஆகவே நான் ஒரு கிளியை வாங்கியிருக்கிறேன். அது பைபிளை அப்படியே சொல்லும். அதை பழக்குவிக்க 12 வருடங்கள் ஆனதாம். அம்மா சோபாவில் உட்கார்ந்து, எந்த அதிகாரம், எந்த வசனம் என்று சொன்னால் போதும், அது பட்பட்டென்று சொல்லும்' என்று கூறினான். மூவரும் தங்கள் அன்னைக்கென்று தாங்கள் வாங்கிய பரிசுகளை பெருமிதமாக நினைத்தபடியே, அவற்றை தங்கள் அன்னைக்கு அனுப்பி வைத்தார்கள்.

அவற்றை பெற்று கொண்ட அன்னையிடமிருந்து ஒவ்வொருவருக்கும் கடிதம் வந்தது. அதன்படி, அவர்கள், மூத்தவனுக்கு 'நீ கொடுத்த வீடு மிகவும் பெரியது. நான் ஒரே ஒரு அறையில் தான் இருக்கிறேன். ஆனால் மற்ற இடம் முழுவதையும் நான் சுத்தப்படுத்த வேண்டி இருக்கிறது' என்று எழுதியிருந்தார்கள். அடுத்தவனுக்கு 'நான் எங்கே வெளியே போகிறேன், நீ எனக்கு அவ்வளவு பெரிய காரை அனுப்பி வைத்திருக்கிறாய்? நீ அனுப்பியிருக்கிற அந்த டிரைவர் அதற்கு மேல் மிகவும் மோசம், முகம் கொடுத்து பேச மாட்டேன் என்கிறான்' என்று எழுதியிருந்தார்கள். மூன்றாமவனுக்கு 'நீ மட்டும்தான் என்னுடைய தேவையையும், என்னை பற்றியும் நன்கு அறிந்திருக்கிறாய்! நீ அனுப்பியிருந்த கோழி; நன்றாக ருசியாக இருந்தது' என்று எழுதியிருந்தார்களே பார்க்கணும்!

பிரியமானவர்களே, நம்முடைய பெற்றோர் நாம் அனுப்பி வைக்கும் பரிசுகளின் மேல் அல்ல, நம்மிடமிருந்து அன்பையே எதிர்ப்பார்க்கிறார்கள். நாம் நினைக்கிறோம், நாம் பரிசுகளை அனுப்பி வைத்தால் அவர்கள் அதிலே திருப்தி அடைந்து விடுவார்கள் என்று. ஒருக்காலும் இல்லை! நீங்கள் அவர்களோடு அன்போடு பேசும் வார்த்தைகளையும், கரிசனையோடு கேட்கும் விசாரிப்புகளையும் அவர்கள் அதிகமாய் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கிறார்கள். என்னுடைய பெற்றோர், சீக்கிரமே மரித்து விட்டதால், வயதான பெரியவர்களை காணும்போது, நமக்கு அந்த கிருபை இல்லையே என்று கலங்குவதுண்டு. வயதான பெரியவர்கள் வீட்டில் இருப்பது நமக்கு எத்தனை ஆசீர்வாதம்! ஆனால் இந்த காலத்தில் வயதான பெற்றோரை பாரமாக நினைத்து, அவர்கள் எப்போது மரிப்பார்கள் என்றும், அவர்களை எப்போது முதியோர் இல்லத்தில் சேர்ப்போம் என்றும் காத்திருப்பவர்கள் அதிகம்! வேதம் சொல்கிறது, 'உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே' என்று. பெற்றோர் கண்கலங்க நாம் ஒருபோதும் காரணமாக இருக்ககூடாது. என் பிள்ளை என்னை மோசமாக நடத்துகிறான் என்று அவர்கள் கர்த்தரிடம் கதறினால், அது நமக்கு சாபமாக முடியும். என்னை போன்று எத்தனையோ பேருக்கு வயதான பெற்றோர் வீட்டில் இல்லை. ஆனால் கர்த்தர் உங்களுக்கு அந்த கிருபையை கொடுத்திருக்கிறார். அதை அன்போடு அனுசரணையோடு பெற்று பெற்றோரை பாதுகாத்து கொள்ளுங்கள். நிச்சயமாக தேவன் அதில் மகிழுவார், உங்களை ஆசீர்வதிப்பார். 'நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பாய்' (சங்கீதம் 128:6) என்பது கர்த்தர் அருளிய வாக்குதத்தம்! உங்கள் பெற்றோர் உங்கள் பிள்ளைகளை சந்தோஷமாய் காணட்டும். அப்போது நீங்கள் உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பீர்கள்! ஆமென் அல்லேலூயா!

நல்ல குடும்பம் நீர் தந்தீரய்யா

செல்ல பிள்ளைகள் தந்தீரய்யா

அணைக்கும் தகப்பனை தந்தீரய்யா

அன்பு அன்னையை தந்தீரய்யா

நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

நன்றிப்பலிபீடம் கட்டுவோம்

நல்ல தெய்வம் நன்மை செய்தார்

செய்த நன்மை ஆயிரங்கள்

சொல்லிச் சொல்லி பாடுவேன்

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த நல்ல நாளுக்காக உம்மை துதிக்கிறோம். நீர் எங்களுக்கு கொடுத்த நல்ல பெற்றோருக்காக உம்மை துதிக்கிறோம். நீர் எங்களுக்கு கொடுத்த ஈவு என்று நாங்கள் அவர்களை நினைத்து அருமையாக அன்பாக நடத்த எங்களுக்கு உதவி செய்யும். எங்கள் பெற்றோர் வயதாகும்போது நாங்கள் அவர்களை தள்ளிவிடாமல், அன்போடு கவனித்து கொள்ள கிருபை செய்வீராக. அதன் மூலம் உம்முடைய ஆசீர்வாதத்தை நாங்கள் பெற்று கொள்ள கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.







நன்றி
Anudhina Manna 

Sunday, 15 March 2020

கடுகளவு விசுவாசம்


கடுகளவு விசுவாசம்

கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். - (மத்தேயு 17: 20).
ஒரு மிஷனரி பெண், ஜப்பானில், ஒரு அனாதை இல்லத்தில், வேலை செய்துக் கொண்டிருந்தார்கள். அந்த அனாதை இல்லம் ஒரு மலைக்கு பின்னால் இருந்தது. மலை சூரிய வெளிச்சத்தை வராதபடி தடுத்ததால், அந்த அனாதை இல்லத்தை சேர்ந்த அநேக பிள்ளைகள் வியாதிப்பட்டார்கள். அந்த மிஷனரி பெண் அந்த அனாதை பிள்ளைகளை நேசித்தபடியால், தினமும் காலையில் அந்தப் பிள்ளைகளுக்கு, வேதத்திலிருந்து வசனத்தை எடுத்துக் காண்பித்து, அதை விளக்கி, காண்பிப்பது வழக்கம்.

ஒரு முறை அவர்கள், ஒரு வருட விடுமுறைக்காக, அமெரிக்க செல்ல இருந்தது. போவதற்கு முன்,  ‘கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்;  உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்’  என்று இயேசுகிறிஸ்து சொன்ன வார்த்தைகளை அந்த பிள்ளைகளுக்கு விளக்கி, நீங்கள் விசுவாசத்தோடு ஜெபியுங்கள்,  ‘கர்த்தர் கிரியை செய்வார்’ என்று சொல்லிவிட்டு, விடுமுறைக்காக சென்றார்கள்.

ஒரு வருடம் கழித்து, அவர்கள் திரும்ப அந்த அனாதை இல்லத்திற்கு வந்தபோது, மிகவும் வித்தியாசமான பாதை இருந்தது. அவர்கள் டிரைவரிடம்,  ‘நீங்கள் தவறான பாதையில் செல்லுகிறீர்கள்’ என்றுக் கூறினார்கள். ஆனால் ஓட்டுநர், அந்தப் பாதையை நன்கு அறிந்திருந்தபடியால், அனாதை இல்லத்தின் முன், சில நிமிடங்களில் வந்து நிறுத்தினார். அப்போது அந்த மிஷனரி பார்த்தபோது, அதே பழைய கட்டடிம்தான், ஆனால், அதை சுற்றிலும், தோட்டமும் பூக்கள் பூத்துக் குலுங்குவதையும் கண்டபோது, அவர்களுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. அதற்குள் பிள்ளைகள் வந்து, அவரைக் கட்டித் தழுவி, திரும்ப வரவேற்றனர். அவர்கள் தன் பைகளைக் கூட வைக்காமல், மிகவும் ஆச்சரியத்தோடு என்ன நடந்தது என்று பிள்ளைகளிடம் கேட்டபோது, அந்த பிள்ளைகள், ‘நீங்கள் தானே சொன்னீர்கள், விசுவாசத்தோடு இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம் என்று. நாங்கள் விசுவாசத்தோடு அந்த மலையைப் பார்த்து சொன்னோம், அது அப்படியே நடந்தது. தேவன் அதை பக்கத்திலுள்ள கடலுக்குள் தள்ளி விட்டார்’  என்று சொன்னார்கள்.

என்ன நடந்தது என்றால், ஜப்பானிய அரசாங்கம், தன் மக்களுக்கு இடம் வேண்டும் என்று நினைத்ததால், இந்த மலையை தெரிந்தெடுத்து, அதை பத்து மாதங்களுக்குள் தரை மட்டமாக்கி, அதை பக்கத்திலிருந்த பசிபிக் கடலுக்குள் தள்ளிவிட்டார்கள். அந்த சிறுவர்களின் விசுவாசம் அந்த காரியத்தை செய்ய வைத்தது.

இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்.  எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மாற்கு 11:22-23) என்று கூறினார். உங்கள் வாழ்க்கையில் இந்த சம்பவத்தில் இருந்த மலையைப் போல் மலைகள் இல்லாமலிருக்கலாம். ஆனால், மலையைப் போன்ற பிரச்சனைகள், அந்தப் பிள்ளைகள் சூரிய வெளிச்சத்தை காணக் கூடாதபடி தடையாயிருந்ததுப் போல, நீங்கள் தேவனுடைய முகத்தைப் பார்க்க கூடாதபடி, உங்கள் வாழ்க்கையில் இருக்கலாம். எந்த நாளும் பிரச்சனைகள், பிரச்சனைகள் என்பதே என் வாழ்க்கையாகி விட்டது என்று பிரச்சனைகளையே நீங்கள் பார்த்துக்கொண்டிருந்தால் தேவனை பார்ப்பது கடினம். ஆனால் தைரியமாக, நீங்கள் கடுகளவு விசுவாசத்தோடு, அந்த பிரச்சனைகளைப் பார்த்து,  நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி,  நான் சொன்னபடியே நடக்கும் என்று உங்கள் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், நீங்கள் சொன்னபடியே ஆகும். ஏனென்றால் அது கர்த்தருடைய பரிசுத்த வார்த்தை. அது ஒரு நாளும் பொய் சொல்லாது.

ஆனால் நீங்கள், விசுவாசமில்லாமல், ‘நான் சொல்லி என்ன நடக்கப் போகிறது’  என்று நினைத்தீர்களானால், அதினால் ஒரு பிரயோஜனமுமிராது. கர்த்தரால் பெயர்க்க முடியாத எந்த பெரிய மலையும் இந்த உலகத்தில் இல்லை. அந்த சிறுப்பிள்ளைகளுக்கு இருந்த விசுவாசத்தைப் போல் குழந்தைத்தனமான விசுவாசத்தோடு நீங்கள் கர்த்தரை நோக்கி பார்த்தீர்களானால், அது நிச்சயமாகவே உங்களுக்கு நடக்கும். விசுவாசிப்போம், பிரச்சனைகளை சமுத்திரத்திலே தள்ளுவோம், கர்த்தரின் உதவியால் நம்மால் கூடாத காரியம் ஒன்றுமிருக்காது. ஆமென் அல்லேலூயா!

நீ விசுவாசித்தால் தேவனின் 
மகிமையை காண்பாய்
தண்ணீரெல்லாம் ரசமாகிடும் 
உன் தாகமெல்லாம் தீர்க்கப்படும் 

ஜெபம்
எங்கள் விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய எங்கள் நல்ல தேவனே, உம்மைத் துதிக்கிறோம். நாங்கள் கடுகளவு விசுவாசத்தோடு, மலையை பார்த்து பேசினால், அது அப்படியே தள்ளுண்டு போகும் என்று சொன்னீரே, எங்களது விசுவாசத்தை வர்த்திக்க பண்ணும் தகப்பனே. குழந்தைகளை போல விசுவாசம் எங்களுக்குள் காணப்பட, அதன் மூலம் எங்கள் பிரச்சனைகளிலிருந்து நாங்கள் விடுபட கிருபை செய்யும்.   எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

நன்றி 
Anudhina Manna

"பயம்" என்றால் பொய்யான ஆதாரம் தன்னை மெய்யானதாக வெளிப்படுத்திக் கொள்வதாகும்.


"பயம்" என்றால் பொய்யான ஆதாரம் தன்னை மெய்யானதாக வெளிப்படுத்திக் கொள்வதாகும்.
F.E.A.R -
False Evidence Appearing Real


நாம் பயத்திற்கு எதிர்த்து நிற்காது போவோமானால் பயம் நம்மை மேற்கொண்டுவிடும்

பிரச்சனைகள், சோதனைகளை கண்டு பயப்படாமல் அதனூடே கடந்து செல்லுங்கள், ஏனெனில் நாம் மட்டும் தனியே அதன் வழியே செல்வதில்லை, தேவன் எப்போதும் நமக்கு உதவி புரிவதற்காக நம்முடனே இருக்கிறார்; அது எப்படிப்பட்டதான வழியாயினும்! எனவேதான் நமக்கு அவர் சொல்லியுள்ளார் "பயப்படாதே" "நான் உன்னுடனே இருக்கிறேன் " என்று!


தேவன் நம்மை தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்


தானியேல் 3:17-30:
"17 நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.
18 விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.
19 அப்பொழுது நேபுகாத்நேச்சாருக்குக் கடுங்கோபமூண்டு: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு விரோதமாய் அவனுடைய முகம் வேறுபட்டது; சூளையைச் சாதாரணமாய்ச் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி உத்தரவுகொடுத்து,
20 சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற அக்கினிச்சூளையிலே போடுவதற்குஅவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய புருஷருக்குக் கட்டளையிட்டான்.
21 அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும், நிசார்களோடும், பாகைகளோடும் மற்ற வஸ்திரங்களோடும் கட்டப்பட்டு, எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்பட்டார்கள்.
22 ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியினாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினி ஜூவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன புருஷரைக் கொன்றுபோட்டது.
23 சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று புருஷரும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள்.
24 அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான்; அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவே என்றார்கள்.
25 அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன். அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின்சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.
26 அப்பொழுது நேபுகாத்நேச்சார் எரிகிற அக்கினிச்சூளையின் வாசலண்டைக்கு வந்து, உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள் என்றான்; அப்பொழுது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள்.
27 தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்தப் புருஷருடைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள்.
28 அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.
29 ஆதலால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு விரோதமாகத் தூஷணவார்த்தையைச் சொல்லுகிற எந்த ஜனத்தானும், எந்த ஜாதியானும், எந்த பாஷைக்காரனும் துண்டித்துப்போடப்படுவான்; அவன் வீடு எருக்களமாக்கப்படும் என்று என்னாலே தீர்மானிக்கப்படுகிறது; இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லையென்றான்.
30 பின்பு ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் தேசத்திலே உயர்த்தினான்,"



ஏசாயா 43:1-2:
"1 இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.
2 நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது."



சங்கீதம் 23:4:
"4 நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்."

Friday, 13 March 2020

கோலியாத்தை முறியடிப்போம்


கோலியாத்தை முறியடிப்போம்

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம். - (ஏசாயா 54:17).
ஒரு விதவை தாய் தன் வீட்டிற்கு அருகாமையிலுள்ள சிறு பிள்ளைகளை கூட்டி வைத்து, ஒவவொரு நாள் மாலையிலும் ஆண்டவரை துதித்து பாடி, சிறு சிறு கதைகள், சம்பவங்கள் மூலம் வேதாகம செய்திகளை பிள்ளைகள் மனதில் பதிய செய்து, வறுமையின் மத்தியிலும் தன்னால் இயன்ற பண்டம் கொடுத்து அனுப்புவார்கள். அநேக பிள்ளைகளின் வாழ்வு மாற்றப்பட்டு வந்தது. பக்கத்து வீட்டுகாரருக்கு தினமும் கைளை தட்டி, அந்த பிள்ளைகள் பாடுவது எரிச்சலை உண்டாக்கியது. ஆகவே அந்த அம்மாவை விரட்ட ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து ஒரு மந்திரவாதியை வரவழைத்தான். குறிப்பிட்ட நேரத்திலே மந்திரவாதி அவர்களுக்கு விரோதமாய் மந்திரங்களை செய்து கொண்டிருந்தான். திடீரென்று மந்திரவாதியின் கைகளும், கால்களும் நடுங்கின. ' ஐயோ என்னை உடனே இப்போதே என் வீட்டிற்கு அனுப்பு, இல்லையென்றால் மரித்து விடுவேன்' என்று கதறினான். காரில் உடனே அவன் வீட்டிற்கு அனுப்பப்பட்டான் மந்திரவாதி. ஆம் தேவன் தெரிந்து கொண்டவர்களை ஆக்கினைக்குள்ளாக தீர்க்கிறவன் யார்? (ரோமர் 8:33) சர்வவல்லமையுள்ள தேவனை அடைக்கலமாக கொண்ட நாம் எந்த ஒரு மாந்திரீகத்திற்கும், பிசாசின் வல்லமைக்கும் கலங்க தேவையில்லை.

மாந்திரீகங்கள் மற்றும் பிசாசின் கிரியைகளை குறித்து வேதாகமம் போதிக்கும் காரியத்தை நாம் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகும். கிறிஸ்தவர்களில் ஒரு சாரார் பிசாசுகளே கிடையாது என்று கூறுவர். மாறாக மறறொரு சாரார் எல்லாவற்றிற்கும் பிசாசு என்று கூறி எதற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். இந்த இரண்டு எண்ண ஓட்டங்களுமே சரியானதல்ல.

வேதாகமத்தில் குறி சொல்லுவோர், மந்திரவாதத்தில் ஈடுபடுவோரை குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது. உதாரணமாக பார்வோனுக்கு முன்பாக மோசேயின் கோல் பாம்பாக மாறியது போல பார்வோனின் மந்திரவாதிகளும் தங்கள் கோல்களை மாற்றினர். அதே போல் எகிப்தியர்களுக்கு மேல் வந்த பத்து வாதைகளில் முதல் இரண்டை எகிப்திய மந்திரவாதிகளும் செய்து காட்டினர். ஆம், பிசாசும் தன்னை பின்பற்றுகிறவர்களுக்கு வல்லமையையும், அற்புதம் செய்கிற வழியையும் கொடுக்கிறான். ஆனால் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வல்லமைக்கு முன்பாக எந்த பிசாசின் வல்லமைகளும் ஒரு பொருட்டல்ல. எகிப்திய மந்திவாதிகள் பாம்பாக மாற்றிய கோலை மோசேயின் கோல் விழுங்கி போட்டது. அதுபோல இரண்டு வாதைகளுக்கு மேல் எகிப்திய மந்திரவாதிகளால் செயல்படுத்தி காட்டமுடியவில்லை என்பதையும் வாசிக்கிறோம்.

பிரியமானவர்களே, மாந்திரீகமும் பில்லி சூனியங்களும் உண்மைதான். ஆனால் அவைகளை விட கோடி மடங்கு வல்லமையுள்ள தேவனுடைய பிரசன்னமும், பாதுகாப்பும் மிகமிக உண்மையாகும். எந்த ஒரு பிசாசின் கிரியைகளுக்கும் நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இயேசுவின் நாமத்தினால் பிசாசுகளை துரத்த அதிகாரம் பெற்ற நாம் ஏன் பிசாசின் வல்லமைக்கு பயப்பட வேண்டும்?

அந்தகார வல்லமைகளை தேவ பெலத்தினாலும், இயேசுகிறிஸ்துவின் வல்லமையுள்ள இரத்தத்தினாலும், அவருடைய நாமத்தின் வல்லமையினாலும் நாம் தோற்கடிக்க வேண்டும். எல்லா நாமத்திற்கும் மேலான இயேசுகிறிஸ்துவின் நாமத்திற்கு பாதாளம் நடுநடுங்கும்! ஒரே ஓட்டமாக ஓடிப்போகும்! அந்த நாமத்தை தரித்து கொண்ட ஒவ்வொருவர் மேலும் பிசாசிற்கும், சாத்தானின் வல்லமைக்கும் எந்தவித அதிகாரமுமில்லை.

கிறிஸ்தவர்களில் சிலர் பயப்படுவார்கள், 'அவன் எனக்கு சூனியம் வைத்து விட்டான், மந்திரம் செய்து விட்டான்' என்று. உண்மையான கிறிஸ்தவனாக இருந்தால், அந்த சக்திகள் அவனுக்கு பயந்து ஓடும். செய்தவனையே தாக்கும். உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம் என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகிறது. கர்த்தரின் நாமமும், அவருடைய இரத்தமும் நம்மை பாதுகாக்கும் கோட்டைகளாகும். அதினாலே நாம் வெற்றி எடுத்து, சாத்தானின் கிரியைகளையும், அவனுடைய தந்திரங்களையும், வெல்வோமாக! ஆமென் அல்லேலூயா!

சர்ப்பங்களை மிதித்திடவும் பெரும்
தேள்களை நசுக்கிடவும்
அதிகாரம் உண்டு வல்லமை உண்டு
தோல்வி இல்லை வெற்றி எனக்கே என்றும்
தோல்வி இல்லை வெற்றி எனக்கே

அந்தகார வல்லமைகளை தேவ பெலத்தால் முறியடிப்பேன்
இயேசுவின் இரத்தம் எந்தன் பாதுகாப்பு
பயமில்லை வெற்றி எனக்கே – என்றும்
பயமில்லை வெற்றி எனக்கே

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, எந்த அந்தகார சக்திகளின் வல்லமையும் எங்களை மேற்கொள்ளாது என்ற உமது கிருபை நிறைந்த வாக்குதத்தத்திற்காக உமக்கு நன்றி. எங்களுக்கு விரோதமாக எழும்பும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும் என்ற உம்முடைய வார்த்தைக்காக நன்றி. நீர் எங்களுக்கு கொடுத்திருக்கிற அதிகாரத்தின்படி நாங்கள் பிசாசுகளை துரத்தவும், சத்துருவின் எல்லா வல்லமைகளையும் மேற்கொள்ளவும், நீர் எங்களுக்கு பெலன் தருவதற்காக உமக்கு நன்றி. எங்கள் துதி ஸ்தோத்திரங்களை இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


நன்றி:
Anudhina Manna

Thursday, 12 March 2020

எப்படி ஜெபிக்க வேண்டும்?


ஜெபம் செய்திடுவோம்

இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள். - (யோவான் 16:24).
புதிதாய் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் எப்படி ஜெபிப்பது என்று தெரியாமல் இருப்பார்கள். எவ்வளவு நேரம் ஜெபிக்க வேண்டும்? எப்படி ஜெபிக்க வேண்டும்? என்ன சொல்லி ஜெபிக்க வேண்டும் என்றெல்லாம் அவர்களுக்கு கேள்விகள் எழும்பலாம்.

ஒரு மனிதர் மிகவும் உடல்நிலை மோசமாகி, ஆஸ்பத்திரியில் படுக்கையில் இருந்தார். அவர் புதிதாய் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர். அவருக்கு சொல்லிக் கொடுக்க யாருமில்லை. அப்போது அவரைக் காண வந்த போதகரிடம், அவர், தன்னுடைய ஜெபிக்க தெரியாத நிலைமை ஒப்புக் கொண்டு, தான் ஜெபிக்க முற்பட்டதாகவும், ஆனால் ஜெபிக்க ஆரம்பிக்கும்போது, தன் மனம் அங்குமிங்கும் அலைவதாகவும் அதற்கு என்ன செய்யவேண்டும் என்று அறியாமல் இருப்பதாகவும் தனக்கு உதவி செய்யும்படியாகவும் அவர் கேட்டுக் கொண்டார்.

அப்போது போதகர், தான் ஜெபிக்கிற விதத்தைக் குறித்து அந்த மனிதரோடு பகிர்ந்துக் கொணடார். தன் பக்கத்தில் ஒரு காலி நாற்காலியைப் போட்டு, அங்கு இயேசுகிறிஸ்து அமர்ந்திருப்பதாக கற்பனை செய்தபடி, தன் மனதில் இருப்பதை அவரிடம் வெளிப்படுத்துவதாகவும் அவர் சொன்னார். அந்த மனிதரிடமும் அப்படி செய்துப் பார்க்க அறிவுரைக் கூறினார்.

அந்தப்படியே அந்த மனிதரும செய்து, முதலில் அரை மணிநேரம் ஆரம்பித்து சில வேளைகளில், இரண்டு மணிநேரம், மூன்று மணி நேரம் போவதே தெரியாமல், கிறிஸ்துவோடு கூட மிக நெருங்கிய உறவு வைத்தவராக ஜெப வீரனாக மாறினார். அங்கு அவரிடம் வந்த நர்சுகளும் அவருடைய ஜெப வாழ்க்கையைக் கண்டு தொடப்பட்டனர்.

திரும்ப போதகர் அவரைக்காண வந்தபோது, அங்கிருந்த நர்சுகள், அவரிடம், கடந்த நாளில் அவர் மரித்துப போனதாகவும், இறப்பதற்கு முன்பு தன் படுக்கையை விட்டு, இறங்கி, அந்த நாற்காலியில் தன் தலையை சாய்த்தவராக, அப்படியே மரித்துப் போனதாகவும் கூறினர். அவர்களுக்கு அது புரியாத புதிராக இருந்தது. ஆனால் போதகர் அதை அறிந்த போது, அந்த மனிதர் தேவனோடு கொண்டிருந்த உறவைப் புரிந்துக் கொண்டார். நாம் ஜெபிக்கும்போது, வார்த்தை அலங்காரங்களோடு ஜெபித்தால்தான் கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்பார் என்று நம்மில் சிலர் தப்பர்த்தம் கொள்கிறோம். நமக்கு தெரிந்த மொழியில் வார்த்தையில் ஜெபித்தாலே கர்த்தர் அதைக் கேட்க ஆவலாயிருக்கிறார். புதிதாய் பிறந்து வளரும் குழந்தை பேச ஆரம்பித்த உடனே சரியான வார்த்தைகளை பேசி விடாது. அதற்கு தெரிந்ததெல்லாம், மா, பா, தாதா இதுதான். ஆனால் அதைக் கேட்கும் பெற்றோருக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி! என் பிள்ளை பேசி விட்டானே என்று, அதுப்போலத்தான் நாம் தினமும் ஜெபிக்க வேண்டும் என்று தேவன் எதிர்ப்பார்க்கிறார். நாம் என்ன சொன்னாலும் அவர் அதில் பிரியப்படுகிற தேவனாய் இருக்கிறார். நாம் ஜெபிக்காதபோதுதான் அவர், பிறந்த குழந்தை பேசாமல் இருந்தால் பெற்றோர் எப்படி வருத்தப்படுவார்களோ அதுப்போல அவரும் வருத்தப்படுவார். நமக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரோடு உரையாடுவோம். முட்டிப் போட்டுதான் அவரோடு பேச வேண்டும் என்பதில்லை. நாம் வேலை செய்துக் கொண்டே, பெண்கள் சமைத்துக் கொண்டே, அவரோடு பேசிக் கொண்டே இருக்கலாம். வார்த்தை அலங்காரம் தேவையில்லை. செய்யுள் போன்ற உரைநடை தேவையில்லை, சாதாரண மொழியிலே பேசலாம். நான் காலையில் எழுந்தவுடன் புன்னகையுடன், Daddy, Good Morning என்றுச் சொல்லுவேன். இந்த நாளைக் காண கிருபைச் செய்தீரே நன்றி என்றுச் சொல்லி படுக்கையை விட்டு எழுந்தரிப்பேன். அப்படி சின்ன சின்னதாக ஜெபித்து, அப்படியே வளர்ந்து வரும்போது நம் ஜெப நேரம் இனிமையாக மாறிவிடும். ஒவ்வொரு நாளும் ஜெபித்து ஆரம்பித்து, ஜெபித்து முடிக்க பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ஜெபமே ஜெயம்!

ஜெபத்தை கேட்கும் எங்கள் தேவா
ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
ஜெபத்திலே தரித்திருந்து
ஜெபத்தின் மேன்மை காணச் செய்யும்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்

ஜெபம்
எங்களது ஜெபத்தைக் கேட்டு, எங்களுக்கு பதில் தருகிற எங்கள் நல்ல தேவனே உம்மைத் துதிக்கிறோம். ஒவ்வொரு நாளும் நாங்கள் ஜெபிக்க எங்களுக்கு கற்றுத்தாரும். உம்மோடு கூட உறவாட, நேரத்தை ஜெபத்தில் செலவழிக்க எங்களை பழக்கப்படுத்திக் கொள்ள உதவிச் செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


நன்றி:
Anudhina Manna

Wednesday, 11 March 2020

நாம் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டோமா?

*நாம் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டோமா? என்பதை எப்படி கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை:*

*ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்து கொள்ளுங்கள்*.

*கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க*

*ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது*

*ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது.*

*உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா படிச்சிகிட்டே போங்க*

1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்..

2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்…

3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க….

4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த
ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க…..

5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்…

உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா?

இல்லே தானே?

நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ
அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை.

இத்தனைக்கும் இவங்களெல்லாம் சாதாரண சாதனையாளர்கள் அல்ல.

அந்தந்த துறையில் உச்சத்தை தொட்டவர்கள்.

மிகப் பெரிய சாதனையாளர்கள்.

ஆனால்……?

கைதட்டல்கள் காணாமல் போய்விடுகின்றன.

சாதனைகள் மறக்கப்பட்டுவிடுகின்றன.

விருதுகளும் பாராட்டுக்களும் அவர்களுடனேயே புதைந்து போய்விடுகின்றன.

இப்பொழுது இன்னொரு ஐந்து கேள்விகள் கேட்கிறேன்

பதில் உடனே கி்டைக்குதா என்று பாருங்கள்

1) உங்கள் பள்ளிக் காலத்தில்
மிகச் சிறப்பாக பாடம் நடத்திய மூன்று ஆசிரியர்கள் பெயரை சொல்லுங்கள்.

2) உங்களுக்கு ஆபத்தான நேரத்தில் உதவிய மூன்று நண்பர்களை சொல்லுங்கள்…

3) உங்களுக்கு வாழ்க்கையில் பயனுள்ளதை கற்றுக்கொடுத்த சிலர் பெயரை கூறுங்கள்…

4) உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றிய சிலரை கூறுங்கள்….

5) நீங்கள் யாருடன் அதிக நேரத்தை செலவழிக்க விரும்புகிறீர்களோ
அவர்கள் பெயர்களை சொல்லுங்கள்…

சில மணித்துளிகளில்
விடைகளை பட்டென்று எழுதி குவித்திருப்பீர்களே.......

இதிலிருந்து என்ன தெரிகிறது?

உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள்
பணக்காரர்களோ,
புகழ்பெற்றவர்களோ
அல்லது பாராட்டுக்களை குவித்தவர்களோ அல்ல.

உங்கள் மீது அக்கறை செலுத்துபவர்களே.

மற்றவர்களை மறக்கும் நீங்கள் இவர்களை மறப்பதில்லை.

பணம் பட்டம் பதவி
இவற்றின் மூலம் பெறும் புகழோ
வெற்றியோ நிலையானதல்ல.

பிறருக்கு உதவி செய்து,
பிறர் மீது அக்கறை கொண்டு
ஒருவர் பெறும் புகழே
வெற்றியே நிலையானது.

உங்கள் மாணவர்கள்
நண்பர்கள் மற்றும் உறவினர்கள்
சிலரிடம் இப்படி கேள்விகள் கேட்டு
அவர்கள் ஒருவராவது
விடையில் உங்கள் பெயரையும் சொல்லுவார்கள் என்றால்…

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம்.

எனவே

அடுத்தவர் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்க வேண்டுமென்றால்

எப்போதும் நல்லதே நினையுங்கள்.
எல்லோருக்கும் நல்லதையே சொல்லுங்கள்.
நல்லதையே செய்யுங்கள்.


படித்ததில் பிடித்தது உங்களுக்கு பகிர்கின்றேன்!