Wednesday, 5 December 2018

ஜெபம் (கொலோசெயர் 1:9-13)




கொலோசெயர் 1:9-13

ஆண்டவரே என்னை எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் உம்முடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்புங்கள் தகப்பனே


சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனே உம்மை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, உமக்கு பிரியமுண்டாக உமக்கு பாத்திரராய் நடந்துகொள்ளவும்,


சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான உம்முடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் என்னை பலப்படுத்துங்கள் தகப்பனே


ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, என்னை தகுதியுள்ளவர்களாக்கினவரும்,

இருளின் அதிகாரத்தினின்று என்னை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவே உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்

இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் நல்ல பிதாவே
ஆமென்!



Tuesday, 4 December 2018

Verse of the day (மத்தேயு 5:44-48)

2018 டிசம்பர் 05 ( புதன் )


இன்றைய ஜீவ அப்பம் 🍞
மத்தேயு 5:44-48
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.

இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்,
அவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?

உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார்கள் அல்லவா?


ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.

🙏நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். செய்வோம்

கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். செய்வோம்🙏


ஜெயங்கொடுக்கிற தேவன்! இன்றைக்கும் உங்களுக்கு ஜெயத்தை அளிக்கட்டும்🙏

Monday, 3 December 2018

Thursday, 22 November 2018

நீங்கள் கீழே விழுந்து விட்டீர்கள்

ஒரு தெருவில் சிற்பி ஒருவன் வசித்து வந்தான். ஒரு முறை ஒரு பெரிய பாறையை தன் கூடாரத்திற்கு உருட்டி வந்தான். அவன் தினந்தோறும் அந்தப் பாறையை தன் கையில் வைத்திருந்த உளியால் அடிக்கும்போது மேல் இருக்கும் கற்கள் சிறு சிறு துண்டுகளாக உடைந்து கீழே விழுந்தது. பின்பும் சிற்பி பாறையை உளியால் 5 வருடங்களாக அடித்து அடித்து விலைமதிக்க முடியாத ஒரு அழகிய சிலையை உருவாக்கினார். இப்பொழுது அந்த சிலையை கொண்டு ஒரு பெரிய அரங்கத்தில் கொண்டு வைத்தான் சிற்பி. இப்போது மண்டபத்திற்குள் செல்ல படிகள் உருவாக்க வேண்டும் என்ன செய்வது என்று சற்று யோசித்தார் ஒரு நல்ல யோசனை கிடைத்தது, பாறைகளில் உள்ள துண்டுகளை சேர்த்து படிகளை உருவாக்கினார் இப்பொழுது மண்டபத்துக்குள் வருகிறவர்கள் எல்லாரும் அந்த சிலையை பார்த்து புகழ்கிறார்கள் அதன் பக்கத்தில் நின்று போட்டோக்கள் எடுக்கிறார்கள் .இப்போது சிலை மிகவும் புகழ் பெற்று விட்டது. எல்லாரும் சிலையைப் பற்றியே புகழ்ந்து பாடினார்கள். இப்படி இருக்கும் போது படிகளுக்கு சிலையை புகழ்ந்து பாடுவது பிடிக்கவில்லை ஒருநாள் மண்டபத்திலிருந்து எல்லோரும் போய்விட்டார்கள் அப்போது இந்த சிறு சிறு துண்டுகள் சிலையை பார்த்து கேட்டது உன்னை செதுக்கிய பாறைகளில் இருந்து தான் நாங்க உடைக்கப்பட்டோம் உன்னை செதுக்கிய சிற்பியின் கரங்களில்தான் நாங்கள் இருந்தோம் ஆனால் இப்போது உனக்கு மரியாதை கிடைக்கிறது எங்களுக்கும் அவமரியாதை கிடைக்கிறது. உன்னை எல்லோரும் மதிக்கிறார்கள் எங்களை எல்லோரும் மிதிக்கிறார்கள் ,எல்லாரும் போட்டோ எடுக்கிறார்கள் எங்களை ஏறிட்டும் கூட பார்க்கவில்லை என்று புலம்பியது அமைதியாக சொன்னது சிலை ஒரு அடித்தவுடன் நீங்கள் கீழே விழுந்து விட்டீர்கள் அதனால் நீங்க கீழே மிதிபடுகிறீர்கள். நான் வருட கணக்காக அடியை பொறுத்து கொண்டதால் எல்லாராலும் மதிக்கப்படுகிறேன் என்றது சாந்தமாக,