Wednesday, 30 October 2019

யார்?


சீனாவில் ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள்.

ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது.
பயந்து போன அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர்.

வெகுநேரமாகியும் மின்னல் வெட்டுவதும், இடி இடிப்பதும் நிற்கவில்லை. அவற்றின் உக்கிரம் வேறு அதிகரித்துக்கொண்டே போனது.
பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் 'நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான் கடவுள் இடியையும், மின்னலையும் ஏவியிருக்கிறார். அந்தப் பாவியை வெளியே அனுப்பிவிட்டால் மற்றவர்கள் பிழைத்துக் கொள்ளலாம்' என்று சொன்னான்.

மற்றவர்கள் இதனை ஆமோதித்தார்கள்.

இத்தனை பேரில் அந்தப்பாவியை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று விவாதம் நடந்தது. விவாதத்தின் முடிவில் தீர்ப்பை கடவுளிடமே விட்டு விடுவது என்று முடிவாயிற்று. அதன் படி அனைவரும் தத்தம் தொப்பிகளை கையில் பிடித்துக்கொண்டு, தொப்பியை மழையில் நீட்டுவது என்று முடிவாயிற்று.

அனைவரும் தத்தம் தொப்பிகளை மழையில் நீட்டினர்.

பயங்கரமான இடி முழக்கத்துடன் ஒரு மின்னல் வெட்டியது. அதில் ஒரு விவசாயியின் தொப்பி மட்டும் எரிந்து சாம்பலாகியது.

மற்ற ஒன்பது விவசாயிகளும் "இவன்தான் பாவி. இவனை முதலில் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளு" என்று கத்திக்கொண்டே அவன் மேல் பாய்ந்தனர்.

அந்த விவசாயி கெஞ்சிக்கதறி தான் அப்பாவி என்று மன்றாடினான். மற்றவர் யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவனை பலவந்தமாக கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினர்.

அவன் கதறிக்கொண்டே மழையில் ஒடினான்.

அப்போது அதி உக்கிரமாக ஒரு மின்னல் தாக்கி இடி இடித்தது. ஒடிக்கொண்டிருந்த விவசாயி அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான். சற்று நேரத்தில் நிலைக்குத் திரும்பி மண்டபத்தைத்திரும்பிப் பார்த்தான்.

மண்டபத்தில் இடி விழுந்து நொறுங்கிக் கிடந்தது. ஒரு புண்ணியவானின் புண்ணிய பலத்தில் தப்பித்திருந்த ஒன்பது விவசாயிகளும் அவனை வெளியே தள்ளி பாதுகாப்பை இழந்து பரிதாபமாக கருகிச் செத்துப்போய் விட்டனர்.

Saturday, 21 September 2019

கோபம் என்பது என்ன



கோபம் என்பது என்ன?

ஒரு குருவிடம் பல காலம் போதனைகளைக் கற்ற ஒருவன், அவரிடமிருந்து விடை பெற்று தன் ஊருக்குப் போனான். போன சில மாதங்களிலேயே குருவிடம் திரும்பி வந்தான்.

குரு அவனை விசாரித்தார்.

"குருவே! என்னிடம் கோபம் இருக்கிறது. அதுவும் கட்டுப்படுத்த முடியாத கோபம். அது வரும்போது நான் என்னையே மறந்துவிடுகிறேன். எதிரே இருப்பவர் யார், என்ன என்று பார்ப்பதற்கும் என்னால் முடியவில்லை. யாராயிருந்தாலும் சீறி விழுந்து விடுகிறேன். நீங்கள்தான் என்னைக் கோபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும்."

"அப்படியா? சரி. எங்கே உன்னிடமிருக்கும் கோபத்தை எனக்குக் காட்டு" என்றார் குரு.

"அதை இப்போது காட்டமுடியாதே?"

"ஏன் அப்படி?"

"அது திடீரென்று வரும், போய்விடும். அது என்னிடம் நிரந்தரமாகக் குடியிருப்பதில்லை."

"அப்படியென்றால் உன்னிடம் கோபம் இல்லையென்றுதான் அர்த்தம். அந்தக் கோபம் உன்னிடம் இருந்திருந்தால் உன்னால் காட்ட முடியுமே! எனவே, இல்லாத ஒன்றை உன்னைத் தொல்லைப்படுத்த ஒரு போதும் அனுமதிக்காதே!" என்றார் குரு.

அதற்குப்பிறகு, சீடன் கோபம் வரும்போதெல்லாம் குரு சொன்ன வார்த்தையை நினைவுவைத்துக் கொள்வான்.

சில மாதங்களிலேயே அவனிடமிருந்து கோபம் ஓடிப் போனது. அமைதியான, நிதானமான ஒரு ஆளாகிவிட்டான் அந்தச் சீடன்.

Wednesday, 26 June 2019

தமிழை வளர்ப்போம்

ஆறாம் வகுப்பு படிக்கும் பக்கத்து வீட்டு பெண் குழந்தையின்
தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன்.
அதில், 1-ல் இருந்து 0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப்பட்டிருந்தது.
எனக்கு, அது தெரியாது என்பதால், அதை அச்சிறுமியிடம்  கேட்டேன்.
உடனே அவள்.,
“1 2 3 4 5 6 7 8 9 0
என்ற எண்ணுக்கு
முறையே,
க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, ய′
என்றாள்
“இதை எப்படி மனப்பாடம் செய்தாய்?’ எனக் கேட்டேன்.
அத்தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி, வாக்கியமாக்கி தமிழ் ஆசிரியை சொல்லிக் கொடுத்ததாக கூறினாள்.
அந்த வாக்கியம்..,

“க’ டுகு,                    1

“உ’ ளுந்து,               2

“ங’ னைச்சு,.            3

 “ச’  மைச்சு,              4

“ரு’ சிச்சு,                   5

“சா’ ப்பிட்டேன்,.       6

“எ’ ன, “.                     7

அ’ வன்,                     8

“கூ’ றினான்;           9

“ய’  என்றேன்      0

மறக்காமல் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவும்

*தமிழை வளர்ப்போம்...*

Sunday, 24 March 2019

ஆயிரங்கள் பார்த்தாலும்

Aayirangal Parthalum:-

ஆயிரங்கள் பார்த்தாலும்
கோடிஜனம் இருந்தாலும்
உம்மைவிட அழகு
இன்னும் கண்டுபுடிக்கலயே


ஆயிரங்கள் பார்த்தாலும்
கோடிஜனம் இருந்தாலும்
இயேசுவைப்போல்அழகு
இன்னும் கண்டுபுடிக்கலயே


நான் உங்களை மறந்தபோதும்
நீங்க என்னை மறக்கவில்லை
நான் கீழே விழுந்தும் நீங்க
என்னைவிட்டுக்கொடுக்கலயே……
அட மனுஷன் மறந்தும் நீங்க
என்னை தூக்க மறக்கலையே

உம்மை ஆராதிப்பேன் அழகே
என்னை மன்னிக்க வந்த அழகே
உம்மை பாட உம்மை புகழ
ஒரு நாவு பத்தலையே -2

காசு பணம் இல்லாம
முகவரி இல்லாம
தனிமையில் நான் அழுதத
நீர் மறக்கலையே

நான் உடஞ்சு போயி கிடந்தேன்
நான் நொருக்கபட்டு கிடந்தேன்
என்னை ஒட்டி சேர்க்க
நீங்க வந்ததத நான் மறக்கலையே
என் கண்ணீரை நீங்க துடைத்துவிட்டத
நான் மறக்கலையே


உம்மை ஆராதிப்பேன் அழகே
என்னை மன்னிக்க வந்த அழகே
உம்மை பாட உம்மை புகழ
ஒரு நாவு பத்தலையே -2


ஆயிரங்கள் பார்த்தாலும்
கோடிஜனம் இருந்தாலும்
உம்மைவிட அழகு
இன்னும் கண்டுபுடிக்கலயே


ஆயிரங்கள் பார்த்தாலும்
கோடிஜனம் இருந்தாலும்
இயேசுவைப்போல்அழகு
இன்னும் கண்டுபுடிக்கலயே


நான் உங்களை மறந்தபோதும்
நீங்க என்னை மறக்கவில்லை
நான் கீழே விழுந்தும் நீங்க
என்னைவிட்டு க்கொடுக்கலயே……
அட மனுஷன் மறந்தும் நீங்க
என்னை தூக்க மறக்கலையே

உம்மை ஆராதிப்பேன் அழகே
என்னை மன்னிக்க வந்த அழகே
உம்மை பாட உம்மை புகழ
ஒரு நாவு பத்தலையே -2