Saturday, 21 September 2019

கோபம் என்பது என்ன



கோபம் என்பது என்ன?

ஒரு குருவிடம் பல காலம் போதனைகளைக் கற்ற ஒருவன், அவரிடமிருந்து விடை பெற்று தன் ஊருக்குப் போனான். போன சில மாதங்களிலேயே குருவிடம் திரும்பி வந்தான்.

குரு அவனை விசாரித்தார்.

"குருவே! என்னிடம் கோபம் இருக்கிறது. அதுவும் கட்டுப்படுத்த முடியாத கோபம். அது வரும்போது நான் என்னையே மறந்துவிடுகிறேன். எதிரே இருப்பவர் யார், என்ன என்று பார்ப்பதற்கும் என்னால் முடியவில்லை. யாராயிருந்தாலும் சீறி விழுந்து விடுகிறேன். நீங்கள்தான் என்னைக் கோபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும்."

"அப்படியா? சரி. எங்கே உன்னிடமிருக்கும் கோபத்தை எனக்குக் காட்டு" என்றார் குரு.

"அதை இப்போது காட்டமுடியாதே?"

"ஏன் அப்படி?"

"அது திடீரென்று வரும், போய்விடும். அது என்னிடம் நிரந்தரமாகக் குடியிருப்பதில்லை."

"அப்படியென்றால் உன்னிடம் கோபம் இல்லையென்றுதான் அர்த்தம். அந்தக் கோபம் உன்னிடம் இருந்திருந்தால் உன்னால் காட்ட முடியுமே! எனவே, இல்லாத ஒன்றை உன்னைத் தொல்லைப்படுத்த ஒரு போதும் அனுமதிக்காதே!" என்றார் குரு.

அதற்குப்பிறகு, சீடன் கோபம் வரும்போதெல்லாம் குரு சொன்ன வார்த்தையை நினைவுவைத்துக் கொள்வான்.

சில மாதங்களிலேயே அவனிடமிருந்து கோபம் ஓடிப் போனது. அமைதியான, நிதானமான ஒரு ஆளாகிவிட்டான் அந்தச் சீடன்.

No comments:

Post a Comment